வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (09:15 IST)

பாஜக பிரமுகர் மேல் கை வைத்தவர்கள் வீடுகள் தரைமட்டம்! – மத்திய பிரதேசத்தில் புல்டோசர் கலாச்சாரம்!

Bulldozer
மத்திய பிரதேசத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை தாக்கிய 3 பேரின் வீடுகள் புல்டொசர் மூலமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.



சமீப காலமாக வட மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள், குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பது புதிய கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. உத்தர பிரதேசத்தை தொடர்ந்து தற்போது மத்திய பிரதேசத்தில் இந்த புல்டோசர் கலாச்சாரம் பரவியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆனால் போபால் தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்தது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பாஜக பிரமுகரை தாக்கியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த 3 பேரின் வீடுகளும் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி அவர்களது வீடுகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல உஜ்ஜயினியில் திறந்தவெளியில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்க்கப்பட்டிருந்தது. அதை மீறி செயல்பட்ட 10 இறைச்சி கடைகள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K