புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (12:23 IST)

தேர்தல் ஆணையர் ராஜினாமா.! பின்னணி என்ன..? இதுதான் காரணமா..?

Arun Goyal
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினிமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அவரது பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.  அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்று கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில கோப்புகள் தொடர்பாக ராஜீவ் குமார், அருண் கோயல் இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 
உடல் நலம் காரணம் காட்டி அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் வெறும் யுகம் தான் எனவும் சொல்லப்படுகிறது. தேர்தல் ஆணையர்கள் மூவரில் தற்போது தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.