புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (10:44 IST)

இந்தியாவை ஆபத்தில் சிக்க வைத்த மோடி?! – லண்டன் பத்திரிக்கை செய்தி!

இந்தியாவை பொருளாதாரரீதியாக பெரும் ஆபத்தில் பிரதமர் மோடி சிக்க வைத்துள்ளதாக லண்டனை சேர்ந்த எக்கனாமிஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக உலகளாவிய வர்த்தக ஜிடிபி மதிப்பில் இந்தியா மிகவும் சரிந்து வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், பொருளாதார நிபுணர்கள் பலரும் எச்சரிக்கை செய்தாலும் அதற்காக மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகள் குறித்த தெளிவான விளக்கங்கள் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் நாட்டின் ஜனநாயகதன்மையின் தரவரிசையில் இந்தியா மேலும் கீழ்நோக்கி சென்றுள்ளது. அரசுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களும், மக்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல்களும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய பொருளாதார சரிவு குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது லண்டனை சேர்ந்த எக்கனாமிஸ்ட் பத்திரிக்கை. அதில் தடுப்பு கம்பிகளில் தாமரை மலர்ந்திருப்பது போன்ற கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. மேலும் 1.3 பில்லியன் மக்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை பிரதமர் மோடி பொருளாதாரரீதியாக மேம்படுத்த தவறி விட்டதாகவும், சரியான திட்டமிடல் இல்லாத பொருளாதார கொள்கைகளால் நாடு பெரும் பொருளாதார ஆபத்தை சந்தித்து வருவதாகவும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.