’அந்த நேரத்தில்’ செவிலியருக்கு முத்தம் கொடுத்த மருத்துவர் பதவி நீக்கம்

mathaya pradesh
Last Modified திங்கள், 14 ஜனவரி 2019 (14:16 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் அறுவை சிகிச்சை நடக்கும் போது செவிலியருகு முத்தம் அரசு மருத்துவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உஜ்ஜையினியில் பிரபல அரசு மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் தலைமை அரசு மருத்துவரும், பெண் செவிலியர் பெண்ணும் முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து 49 வயதான மூத்த அறுவை சிகிச்சை மருத்துவரின் பதவி  பறிக்கப்பட்டது. அந்த மாவட்டத்தின் ஆட்சியர் ஷாஷாங் மிஸ்ரா, இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
அறுவை சிகிச்சையின் போது கவனக் குறைவாக இருந்ததால் தவறிழைத்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :