வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 2 ஜனவரி 2021 (12:12 IST)

டில்லியில் போராடி வந்த விவசாயி ஒருவர் திடீர் மரணம்....

டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 38 வது நாளாக மத்திய அரசின்  3   வேளாண்சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியும், கடும் குளிரிலும் வெயிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகத் தகவல் வெளியானது.

 இந்நிலையில், இன்று மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிகளுக்கும் வேளாண் சட்டங்கள் குறித்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மீண்டும் தோல்வியடைந்துள்ள நிலையில் மீண்டும் மறு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், இன்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவர் திடீரென்று மரணமடைந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், ’’எனது தியாகம் வீணாகக்கூடாது’’ என அவர்  கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் தற்போது, தகவல் வெளியாகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.