திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (17:11 IST)

கொரோனா நோயாளிகளை வீட்டுக்குள் பூட்டி வைத்த கொடூரம் !

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே  கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை  அருகில் வசிப்பவர்கள் இரவு நேரத்தில் பூட்டி வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தாய், தந்தை, மகன் உள்ளிட்ட ஒரு குடும்பம் வசித்து வருகின்றனர். இதில், பெற்றோர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

ஆனால் மருந்தகத்திற்குச் சென்று மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு வந்துள்ளனர். இதனால் அருகில் வசிப்போர் அவர்களின் வீட்டை இரவு நேரத்தில் பூட்டி விட்டனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.