செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (15:37 IST)

வடிவேலு பட காமெடி போன்று எல்.இ.டி பல்பை விழுங்கிய சிறுவன்!!

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார், கலாபவன்மணி, வடிவேலு,ம் நமீதா  உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ஏய்.இப்படம் வெற்றி பெற்றதுடன் இப்படத்தில் இடம் பெற்ற அத்தனை காமெடிகளும்  மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தில் ஒரு வடிவேலிடம் வந்து பீஸ்போன பல்புகளை விலைக்கு வாங்கிக் கடித்தும் முழுங்குவார். பார்ப்பவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

தற்போது இதேபோன்று ஒரு சம்பவம்  நடந்துள்ளது.

ஐதராபாத்தில் வசித்து வரும் 9 வயது சிறுவன் ஒருவர் விளையாடும்போது, தவறுதலாக்க ஒரு எல்.இ.டி பல்பை விழுங்கியுள்ளான். அந்த பல்ப் அவனது நுரையீரலுக்குச் செல்லும் பாதையில் சிக்கிக்கொண்டது. இதனால் துடிதுடித்துபோன சிறுவனை மருத்துவனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அதை அகற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.