வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (16:47 IST)

பாஜக ஆட்சிக்காலத்தில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாஜக ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தில் இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி முகாம் நடந்ததது.

இந்த  நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த உள்துறை அமைச்சர் பேசியதாவது:   மத்தியில் பாஜக ஆட்சி பதவியேற்ற 8 ஆண்டு காலத்தில் ஜம்மு –காஷ்மீரில் மாநிலத்தில் பயங்கரவாத செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு மா நிலங்களில் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் இயங்கங்களில் செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில்  ஏஜென்சியில், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகள்  மீது நடவ்டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளர்.

மேலும்,பாஜக ஆட்சியில்தான் வலுவான ஜனனாயகம் அமைய பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.