ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (16:00 IST)

தடுப்பூசி போட்டுக் கொண்டவர் பலி.. காரணம் என்ன? – சுகாதாரத்துறை விளக்கம்!

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாநில சுகாதார துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி குறித்த அச்சமும் மக்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் நேற்று 42 வயதுமிக்க சுகாதார பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட மாநில சுகாதார துறை முதற்கட்ட விசாரணையில் பணியாளர் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல என தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.