வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (20:43 IST)

கூட்டணிக்காக ஆட்சி கலைப்பா? தெலங்கானா டெல்லிக்கு அடிமை அல்ல

தெலங்கானாவில் ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், முன் கூட்டியே தேர்தலை சந்திக்க சந்திக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். எனவே, சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
 
இந்த தீர்மானத்தை அம்மாரில் ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். தற்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளில் 105 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். விரைவில் மீதமுள்ள தொகுதிகளின் வேட்பாளர்களின் அறிவிப்புகள் வெளியாகும். 
 
சந்திரசேகர ராவ் தேர்தலுக்கு இத்தனை வேகம் காட்டினாலும், தேர்தல் ஆணையம் இவருக்கு பிரேக் போட்டுள்ளது. ஆம், 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடத்தி டிசம்பரில் முடிவு அறிவிப்பது என்பது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக ஆட்சி கலைக்கப்பட்டது என ராகுல் கூறியதற்கு சந்திரசேகர ராவ் பதிலளித்துள்ளார். தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 100 சதவீதம் மதச்சார்பற்ற கட்சியாகும். அப்படி இருக்கையில் மதவாத கட்சியான பாஜகவுடன் நாங்கள் எவ்வாறு கூட்டணி வைப்போம்?
 
நாட்டிலேயே மிகப்பெரிய கோமாளி என்றால் அது ராகுல்காந்தி என்பது இந்த நாட்டுக்கே தெரியும். நாடாளுமன்றத்தில் பிரதமரை கட்டி அனைத்து கண் அடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரியும். 
 
ராகுல் காந்தி தெலங்கானாவிற்கு வந்து பிரசாரம் செய்தால் எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். தெலங்கானாவின் இருக்கும் யாரும் டெல்லிக்கு அடிமை இல்லை என தெரிவித்துள்ளார்.