18 வயது மாணவனுடன் மருத்துவ மாணவி ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை!

18 வயது மாணவனுடன் மருத்துவ மாணவி ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை!


Caston| Last Modified சனி, 15 ஜூலை 2017 (13:12 IST)
மருத்துவ மாணவி ஒருவர் 18 வயது மாணவனுடன் ஹோட்டலில் ரூம் எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.

 
 
டெல்லியில் உள்ள ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார் 19 வயதான மாணவி ஒருவர். இவரது தந்தை ரோஹினி பகுதியில் துணை ராணுவப்படையில் பணி புரிந்து வருகிறார். இந்த மாணவியும் ஜனக்பூரி பகுதியை சேர்ந்த 18 வயது மாணவனும் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
 
அந்த மாணவன் தனக்கு பயிற்சி வகுப்பு இருப்பதாக கூறிவிட்டு துவாராகாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆன்லைன் மூலமாக அறை புக் செய்து மாணவியுடன் சென்றுள்ளான்.
 
அவர்கள் அறை வாடகைக்கு எடுத்த நேரம் முடிந்தும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகம் அறை கதவை தட்டினர். ஆனால் அவர்கள் திறக்காததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
இதனையடுத்து போலீசார் வந்து கதவை திறந்து பார்த்த போது இருவரும் மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
மாணவியை விட மாணவனுக்கு 1 வயது வித்தியாசம் உள்ள நிலையில் காதல் பிரச்சனையால் இவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தற்கொலைக்கான காரணம் குறித்தான எந்த தகவலும் வெளியாகவில்லை.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :