செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (17:55 IST)

குடிபோதையில் பள்ளிக்கு வந்து மாணவர்களை திட்டிய ஆசிரியர் !

குடிபோதையில் பள்ளிக்கு வந்து மாணவர்களை திட்டிய ஆசிரியர் !

ஒடிஷா மாநிலம் கேந்திரபரா நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் சனாபட கோபால்பூர் கிராம பஞ்சாயத் பள்ளிக்  கூடத்தில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர் ரவி நாராயணன் மிஸ்ரா மது அருந்திவிட்டு பள்ளி வந்து மாணவர்களை திட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒடிஷா மாநிலம் கேந்திரபரா நகர் ராஜ்நகர்   என்ற பகுதியைச் சேர்ந்த சனடாபடகோபால்பூர் என்ற கிராம பஞ்சாயத்து அரசு பள்ளிக் கூடம் ஒன்று இயங்கி வருகிறது. 
 
இப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருபவர்  ரவி.நாராயண் மிஷ்ரா.  இவர் சமீபத்தில் பள்ளிக்கு குடிபோதையில் வந்து, மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து வீடியோ பரவியது. இவர் மீது பலரும் புகார் அளித்த நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமையாசிரியர் மிஷ்ராவை சஸ்பெண்டு செய்துள்ளனர்.