மாணவனை பின்னிப் பெடலெடுத்த ஆசிரியர் ! அதற்கு கூலி கொடுத்த பெற்றோர்...

lucknow
Last Modified செவ்வாய், 20 நவம்பர் 2018 (13:25 IST)
உத்திரபிரதேசத்தில் ல்க்னோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித். இவர் அங்கு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். தன் மகனை நல்ல பள்ளியில் சேர்த்தவர் அவன் மேலும் நன்றாக படிக்கவேண்டும்  என்பதற்காக ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்து தன் வீட்டுக்கு வந்து மகனுக்குச் சொல்லிக்கொடுக்க  வழிசெய்தார்.
தினமும் சில மணி நேரங்களுக்கு சில ஆயிரம் ரூபாய்களை  அமித் அந்த ஆசிரியருக்கு கொடுத்து வந்தார்.
 
தன் வீட்டில் ஒரு சி.சி.டிவி கேமராவை அவர் பொருத்தி இருந்தார்.  அந்த ஆசிரியர் வருவதும் மாணவனுக்கு சொல்லிக் கொடுப்பதுமாக இருக்கிறார் என்று நினைத்து  தவறாமல் அவருக்கு அமித் சம்பளம் கொடுத்துவந்துள்ளார்.
 
திடீரென்று ஒருநாள் அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தவகுக்கு முகம் மாறிவிட்டது.
 
ஆம்! தன் மகனை ஆசிரியர் வெளுத்து வாங்குகிறார். தடி. பிரம்பு,கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து அவனை அடிகிறார்.
 
மாணவன்  சரியாகப் படிக்கவில்லை என்பதால் ஆசிரியர் இப்படி பொறுமையின்றி நடந்து கொண்டிருக்கிறார்.பெற்றோரிடம் கூறினால் ஆசிரியர் இன்னும் பலமாக தாக்குவார் என்று கருதி இதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.
 
இதைப் பார்த்ததும் அமித் போலீஸுக்கு தகவல் தெரிவிக்க சிசிடிவி கேமரா காட்சிகளை சாட்சியாக அளிக்க போலீஸார் இ.பி.கோ.சட்டப் பிரிவு 307  ன் படி கொலை முயற்சி பதிவு செய்து ஆசிரியர் கமல் ஷர்மாவை சிறையில் அடைத்தனர்


இதில் மேலும் படிக்கவும் :