புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (18:13 IST)

முன்னாள் பணியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரத்தன் டாடா!

முன்னாள் பணியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரத்தன் டாடா!
இந்தியாவின் முன்னணி தொழில் தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா தனது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பார் என்றும் அவர்களுக்கு ஏராளமான சலுகைகளை அவ்வப்போது வழங்கி வருவார் என்றும் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக டாடா நிறுவனங்களில் ஒருவருக்கு வேலை கிடைத்து விட்டால் அவருடைய குடும்பம் செட்டில் ஆகிவிடும் என்று பலர் கூறி வருவதை பார்த்திருக்கிறோம் 
 
இந்த நிலையில் முன்னாள் பணியாளர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரத்தன் டாடா குறித்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்கள் உடல்நிலை சரியில்லாத தனது நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புனேவில் உள்ளஅவரது வீட்டுக்கு சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்
 
ரத்தன் டாடாவின் வருகை அந்த ஊழியருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பதும் டாடாவின் வருகை குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது