தமிழருக்கு சிகிச்சை மறுக்கப்பட்ட துயரம்: 7 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர் பலி!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (20:05 IST)
கேரளாவில் விபத்தில் சிக்கிய தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிகிச்சையளிக்காமால் அலைகழித்த சம்பவத்தால், அவர் 7 மணி நேரம் உயிருக்கு போராடி பின் இறந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
 
கேரளாவின் கொல்லம் பகுதியில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் சாலை விபத்து ஒன்றில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் பலத்த காயமடைந்தார். 
 
ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு பார்வையாளர்கள் யாரும் இல்லை என கூறி சிகிச்சை அளிக்க மறுத்தனர்.
 
பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவமனையை அனுகியபோதும் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அங்கு சுவாச குழாய் வசதி இல்லை என கூறி திரும்பி அனுப்பினர். 
 
இதன் காரணமாக சுமார் 7 மணி நேரம் ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடிய முருகன் இன்று காலை 6 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :