வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (06:51 IST)

தமிழ் மொழியில் இணையதளம்: திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியது

திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. ஆனால் தேவஸ்தானத்தின் இணையதளம் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததால் ஆங்கிலம் தெரியாதவர்கள் சிரமப்படுவதாகவும், இதனையடுத்து தென்னிந்திய மொழிகளில் இணையதளம் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன





இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் தனித்தனியாக இணையதளங்கள் தொடங்க முடிவு செய்தது. முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி நடந்த பிரம்மோற்சவ விழாவின் போது, தெலுங்கு மொழியில் இணையதள சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு தொடங்கிவைத்தார்.

அதன் பின்னர் இம்மாதம் 1ஆம் தேதி கன்னட மொழியிலும் இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முதல் தமிழ் மொழியில் திருப்பதி தேவஸ்தான இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதனை, திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில், முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தொடங்கிவைத்தார். இனிமேல் தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்பவர்கள் தமிழ் மொழி இணையதளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.