கொரோனா வைரஸ் எதிரொலி: தாஜ்மஹால் மூடல், திருப்பதியில் குறைவான கூட்டம்
கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது
பயணம் செய்வதை தவிர்க்கும் வகையிலும், ஒரே இடத்தில் அதிக நபர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலும் மூடப்பட்டது. இதனை அறியாமல் தாஜ்மகாலை பார்க்க வந்த ஒரு சிலர் மூடப்பட்டிருந்த தாஜ்மஹாலை ஏக்கத்துடன் பார்த்து சென்றதாக தெரிகிறது
தாஜ்மஹால் மூடல், திருப்பதியில் குறைவான கூட்டம்
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் பெருமளவு குறைந்துள்ளது. லட்சக்கணக்கில் தினமும் பக்தர்கள் வந்து கொண்டிருந்த திருப்பதியில் தற்போது நூற்றுக்கணக்கில் கூட பக்தர்கள் இல்லை என்று கூறப்படுகிறது இதனை அடுத்து டோக்கன் சிஸ்டம் நீக்கப்பட்டு பக்தர்களை நேரடியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனசெய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் திருமலையில் உள்ள முக்கால்வாசி கடைகள் அடைக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் இல்லாததால் பெருமளவு வியாபாரம் குறைந்துள்ளதால் வியாபாரிகளும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.