வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (07:20 IST)

தன்னலம் பாராமல் உழைக்கும் மருத்துவர்கள்: அறை கொடுத்து கௌரவித்த ஆடம்பர ஹோட்டல்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரஸுக்கு எதிராகப் போராடிவரும் மருத்துவர்களுக்காக தாஜ் ஹோட்டல் தங்கள் சொகுசு அறைகளை கொடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2300 ஐ தாண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விகிதம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதையடுத்து வைரஸ் தொற்று உள்ளவர்களை தங்கள் உயிரையும் பணயம் வைத்து அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்படி கொரோனா நோயாளிகளை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு வீடுகளில் தங்க அனுமதி தராமல் வீட்டு உரிமையாளர்கள் துரத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற சொகுசு ஹோட்டல்களில் ஒன்றான தாஜ் நிறுவனம் தங்கள் சொகுசு அறைகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்காக வழங்கியுள்ளது.

இது சம்மந்தமானப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.