வருகிறது ஸ்விக்கி ஸ்டோர்ஸ் ! – வீடு தேடிவரும் மளிகை, மருந்து பொருட்கள்

Last Modified புதன், 13 பிப்ரவரி 2019 (11:08 IST)
உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தனது அடுத்த கட்ட சேவையாக மளிகைப் பொருட்கள் முதல் மளிகைப் பொருட்கள் விநியோக இருக்கிறது.
இந்திய மெட்ரோ நகரங்கள் மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு பொருள் விநியோக நிறுவனங்கள் சக்கைப் போடு போட்டு வருகின்றன. பேச்சிலர்கள் மற்றும் குடும்பத்தில் இருவரும் வேலைக்கு செல்பவர்கள் ஆகியோரின் ஆதரவுகள் இந்த நிறுவங்களுக்கு அதிகமாக கிடைத்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் வளர்ச்சியால் பெருநகரங்களில் ஹோட்டல்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஸ்விக்கியின் இந்த அசுர வளர்ச்சியை அடுத்து இப்போது ஸ்விக்கி தனது அடுத்தகட்ட பாய்ச்சலை ஆரம்பித்துள்ளது. இதுவரை உணவுப்பொருட்களை மட்டும் விநியோகித்து வந்த ஸ்விக்கி, இனி மளிகைப் பொருட்கள் முதல் மருந்து மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தையும் விநியோகிக்க இருக்கிறது. இது குறித்து தங்கள் வலைதளத்தில் தெரிவித்துள்ள ஸ்விக்கி நிறுவனம் ‘‘ஸ்விக்கி ஸ்டோர்ஸ் தளத்தில் பொருட்களைத் தேர்வு செய்து, வேண்டிய பொருட்களின் பட்டியலை உறுதி செய்ததும் வசதியான கட்டண முறையில் பொருட்கள் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். ஸ்விக்கி ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்களின் எல்லா  வீட்டு உபயோகத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.


இதன் முதல் கட்டமாக 3500 நிறுவனங்கள் இப்போது ஸ்விக்கி ஸ்டோர்ஸில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன. ஹெல்த்கார்ட், ஜாப்ஃப்ரெஷ் மற்றும் அப்போலோ பார்மசி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் இச்சேவையில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :