திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (08:11 IST)

வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர்: குவியும் பாராட்டுக்கள்..!

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் நிலையில் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் என்ற பெருமையை மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா என்ற பெண் பெற்றுள்ளார். 
 
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அதிவேக ரயில் ஆன வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது என்பதும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பதும் தெரிந்ததை. 
 
இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை சுரேகா யாதவ் என்பவர் பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தின் சோலாலம்பூர் என்ற ரயில் நிலையத்தில் இருந்து மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரை வந்தே பாரத் ரயிலை இயக்கிய  சுரேகாவின் புகைப்படத்தை பகிர்ந்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது
 
Edited by Siva