ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (16:04 IST)

சூரத் மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட பயங்கர விபத்து.. வீடு இடிந்ததால் அதிர்ச்சி..!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட பயங்கர கிரேன் விபத்து ஏற்பட்ட பரபரப்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

சூரத் மெட்ரோ பணியில் இரு கிரேன்கள் மூலம் இரும்பு கர்டரை தூண் மீது ஏற்ற முயன்ற போது, எடை தாங்க முடியாமல் ஒருபக்க கிரேன் சரிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து மறுபக்கம் இருந்த கிரேனும் சரிந்ததில் அருகே இருந்த வீட்டின் மீது இரும்பு கர்டர் விழுந்தது. இதில் வீட்டின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது.

நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. லேசான காயங்களுடன் கிரேன் ஆபரேட்டருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் சூரத் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக இடிந்த  வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இடிந்த வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவிதமான காயம் ஏற்படவில்லை என்ற நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வீட்டுக்கான பழுது பார்க்கும் செலவை மெட்ரோ ரயில் நிறுவனம் தந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran