1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (16:48 IST)

கட்டாய மதமாற்றம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; சுப்ரீம் கோர்ட்

supreme
கட்டாய மதமாற்றம் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொண்டது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மத்திய மாநில அரசுகள் கட்டாய மத மாற்றங்களை தடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது 
 
இதனை அடுத்து இன்றைய விசாரணையில் கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நவம்பர் 22ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது
 
கட்டாய மதமாற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் மதத்தில் சுதந்திரம் இருக்கலாம் ஆனால் கட்டாய மதமாற்றம் சுதந்திரம்  இல்லை என்றும் இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran