வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (13:15 IST)

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் இனிமேல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

 
பட்டாசு மற்றும் தீபாவளி அன்று உபயோகப்படுத்தப்படும் பல்வேறு வெடிப்பொருட்களால் நாடு முழுவதும் காற்று மாசுபடுவதாகவும் மக்களுக்கு இதனால் பல்வேறு சுவாசப் பிரச்சனைகள் வருவதாகவும் கூறி பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய வேண்டுமென பொதுநல வழக்கொன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று ஏ கே சிக்ரி மற்றும் அஷோக் பூஷன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் “தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். குறிப்பிட்ட பொது இடங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடுக்க வேண்டும். அதேபோல், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் குறைந்த அளவு மாசை உமிழும் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். இந்த உத்தரவு நாடுமுழுவதும் உள்ள கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் பொருந்தும்” என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 
ஆனால், தீபாவளி மற்றும் பண்டிகை நாட்களில் பகலில் பட்டாசு வெடித்து பழக்கப்பட்ட மக்கள் இதை ஏற்று, கடைபிடிப்பார்களா என்பது தெரியவில்லை.