செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (12:51 IST)

மம்தா பானர்ஜி நியமனம் செய்த பல்கலை துணைவேந்தர்: ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்!

mamtha
கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமனம் செய்த நிலையில் அந்த நியமனத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
கட்ந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சோனாலி சக்கரவர்த்தி என்பவரை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமனம் செய்தார்
 
இந்த நியமனத்தை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை முதல்வர் நியமனம் செய்தது தவறு என உத்தரவிட்டது
 
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த நிலையில் கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனை மேற்கு வங்க கவர்னர் ஒப்புதல் இன்றி மாநில அரசு பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தருவதாக கருதுவதாக தனது தீர்ப்பை அளித்துள்ளது. இது மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது
 

Edited by Siva