1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 30 ஜூலை 2015 (06:48 IST)

யாகூப் மேமன் வழக்கு: நள்ளிரவில் செயல்படும் உச்ச நீதி மன்றம்

யாகூப் மேமன் வழக்கை இரவும் முழுவதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து வருகிறார்கள்.
 

 
கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவரது தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
 
இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் ஜூலை 30 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த உத்தரவுக்கு தடை கோரி, யாகூப் மேமன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. இந்த அமர்வு அயாகூப் மேனனின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
 
இந்நிலையில், யாகூப் மேமன் தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு புதிய கருணை மனு ஒன்றை அனுப்பினார். இந்த மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.
 
இந்த நிலையில், யாகூப் மேமனின் தூக்குக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து 3 பேர் கொண்ட அமர்வு இந்த நள்ளிரவு நேரத்திலும் இந்த மனு மீது விசாரணை நடத்தி வருகிறது.