வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 24 அக்டோபர் 2015 (17:17 IST)

இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்தது சன் டிவி

பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல்களில் சன் டிவி, இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
 

 
ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி மையம் வாராவாரம் முதல் 10 இடங்கள் பிடித்தவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன்படி, கடந்த 41ஆவது வாரத்தின் முடிவில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
 
சன் தொலைக்காட்சியை 41ஆவது வாரத்தில் 11 இலட்சத்து 53 ஆயிரத்து 449 பேர் கண்டுகளித்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த தொலக்காட்சியை 9 இலட்சத்து 2 ஆயிரத்து 574 பேர் பார்த்துள்ளனர்.
 
முதல் 10 இடத்தை ஒளிபரப்பு நிறுவனங்கள்:
 
1. சன் டிவி [Sun TV] - 11,53,449
2. ஸ்டார் ப்ளஸ் [Star Plus] - 9,02,574
3. கலர்ஸ் [Colors] - 7,76,135
4. ஜீ டிவி [Zee TV] - 6,73,430
5. ஜீ அன்மோல் [Zee Anmol] - 6,11,550
6. ஸ்டார் கோல்ட் [Star Gold] - 5,46,919
7. ஸ்டார் உட்சவ் [Star Utsav ] - 5,04,338
8. லைஃப் ஓகே [Life OK] - 4,91,802
9. ஈடிவி தெலுங்கு [ETV Telugu] - 4,47,160
10. ஜீ சினிமா [Zee Cinema] - 4,27,533