வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (13:23 IST)

பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு சம்மன் : நீதிமன்றம் உத்தரவு

நில மோசடி வழக்கு தொடர்பாக, தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமவுலிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட விவகாரம், தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஈ, பாகுபலி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ராஜமவுலி. அவருக்கு சொந்தமாக ஹைதராபத் பஞ்சாரஹில்ஸ் பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அதன் கீழ்தளத்தில் அவருக்கு சொந்தமாக உள்ள 1120 சதுர அடியை 2011 ஆம் ஆண்டு, அவர் விற்க முடிவு செய்தார்.
 
அதன்படி, சினிமா தயாரிப்பாளர் புவனேஷ்வர் என்பவர் அந்த இடத்தை வாங்க முன் வந்தார். அதற்கு முன் பணமாக ரூ.2.7 லட்சத்தை அவர் ராஜமவுலியிடம் கொடுத்தார். 
 
அதன்பின், அந்த அபார்ட்மெண்ட் சட்ட விரோதமாக கட்டப்பட்டது என்றும், ராஜமவுலி பெயரில் மின்சார இணைப்பு கூட அங்கு இல்லை என்பதும்,  நான்கு ஆண்டுகளான அந்த இடத்திற்கு சொத்து வரி கட்டவில்லை என்பதும், அதோடு அந்த கட்டிடத்தின் பெயரில் கடன் இருப்பதும் புவனேஸ்வருக்கு தெரியவந்தது. 
 
இதுபற்றி அவர்  கேட்ட போது, ராஜமவுலி சரியான பதிலை கூறவில்லை. மேலும் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விலை பேசி விற்று விட்டார். இதனால் புவனேஷவர் நாம்பல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த புகாரில் ராஜமவுலி தன்னை ஏமாற்றி பணம் பறித்தாக கூறியிருந்தார். 
 
இந்த வழக்கில் ஆஜராகும்படி நீதிமன்றம் முன்று முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. எனவே, பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று, ராஜமவுலிக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த விவகாரம் தெலுங்கு பட உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.