செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (04:26 IST)

இஸ்லாமியர்களுக்கு இவ்வளவு சலுகையா? நிறுத்துங்கள் என்கிறார் பிரவீன் தொகாடிய

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை நிறுத்த வேண்டும் அல்லது அதே அளவிற்கு சலுகைகளை இந்துக்களுக்கும் அளிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.



 


குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் விஷ்வ ஹிந்தி பரிஷத் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற அதன் தலைவர் பிரவீன் தொகாடியா ’ஏக் முத்தி அனஜ்’ என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, உணவு தானியங்கள் பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டு, ஏழை இந்துக்களுக்கு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் அகமதாபாத் நகரில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் இந்த மாநாட்டில் அவர் பேசியபோது, “இந்துக்கள் கட்டும் வரிப்பணத்திலிருந்து முஸ்லீம்கள் சலுகைகள் பெறும் போது, ஏன் படேல், தாக்கூர் மற்றும் கோலி சமூக மக்கள் சலுகைகள் பெறக் கூடாது? முஸ்லீம்களுக்கு புனிதப் பயணம் செய்யவும், அவர்கள் கல்வி நிறுவனங்கள் நடத்தவும் அரசு அவர்களுக்கு பல்வேறு மானியங்களை அளிக்கிறது. ஆனால் இந்துக்களுக்கு அவ்வாறு அளிக்கப்படுவதில்லை. எனவே முஸ்லீம்களுக்கு அளிக்கப்படும் மானியங்களும்,சலுகைகளும் நிறுத்தப்பட வேண்டும் அல்லது அதே அளவு சலுகைகள் இந்துக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.” என பிரவீன் தொகாடியா அந்த மாநாட்டில் பேசியுள்ளார். இவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.