நிதிஷ் குமாரை பல்டி அடிக்க விட்ட சுப்பிரமணியன் சுவாமி
நிதிஷ் குமார் அடிக்கடி மாறுவதை கேலி சித்திரம் கொண்டு விளக்கி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
நிதிஷ் குமார் மீண்டும் பாஜக ஆதரவுடன் தற்போது பீகாரில் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேலி செய்து கருத்து சித்திரம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுவரை நிதிஷ் குமார் எடுத்த அரசியல் முடிவுகளை கொண்டு அந்த கருத்து சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நிதிஷ் குமார் கட்சிகளுடன் கூட்டணி வைத்த அண்டுகளுடன் அவர் பல்டி அடிப்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த டுவீட் வைரலகியுள்ளது.
மேலும் இந்த பதவுக்கு சுப்பிரமணியன் சுவாமி நிதிஷ் ஜிம்னாஸ்டிக்ஸ் என்று தலைப்பிட்டுள்ளார்.