Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சட்டம் தான் முக்கியம்.. சசிகலா இல்ல: சு.சுவாமி அந்தர் பல்டி!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (11:56 IST)
சசிகலாவை நான் ஆதரிக்கவில்லை, அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி, அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்து வருகிறேன் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

 
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக விவகாரங்களில் அதிகம் தலையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டவர் சுப்பிரமணியன் சுவாமி. 
 
முன்னர் சசிகலாவுக்கு எதிராக சில கருத்துகளை கூறி வந்த சு.சுவாமி, திடீரென சசிகலா முதல்வராவார் என சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்தார்.
 
இந்நிலையில் சசிகலாவை முதல்வராக பத‌விப் பிரமாணம் செய்து வைக்காம‌ல் இருப்பதால் தமிழக பொறுப்பு ‌ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீது குற்றம்சாட்டினார். 
 
ஆனால் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில், சில ஊடகங்கள் அரசியல் செய்வதற்காக நான் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வருகின்றனர். நான் அரசியலமைப்பை பின்பற்றுகிறேன். அதன் அடிப்படையிலேயே கருத்து கூறினேன். சசிகலாவை ஆதரிப்பதாக நான் கூறியதே இல்லை என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :