Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர்!

சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர்!

திங்கள், 2 அக்டோபர் 2017 (11:36 IST)

Widgets Magazine

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விளையாடிக்கொண்டு இருந்த ஏழு வயது சிறுமியை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்கிச்சென்று காவல் நிலையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
உத்தரப்பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கெம்ரி நகரின் அருகே பன்வர்க்கா பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் வெளியே ஏழு வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது குடிபோதையில் வந்த தாஜ்வீர் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்துக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று காவலர் குடியிருப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
சிறுமியின் சத்தத்தை கேட்டு வந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அவர்கள் விரைந்து வந்து சப் இன்ஸ்பெக்டரிடமிருந்து அந்தச் சிறுமியை மீட்டனர். மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர். பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அந்த சப் இன்ஸ்பெடர் கைது செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி: தீபாவளிக்கு பின்னர்!

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ள ராகுல் காந்தி தீபாவளிக்கு பின்னர் அந்த ...

news

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மோடிக்கு தெரியும்: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வருடம் செப்டம்பர் ...

news

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதி துரைசாமி அதிரடி மாற்றம்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை ...

news

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு திடீர் உடல் நலக்குறைவு: அப்பல்லோவில் அனுமதி!

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அப்பல்லோ மருத்துவமனையில் ...

Widgets Magazine Widgets Magazine