வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (18:09 IST)

பள்ளி கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவன்: காரணம் என்ன?

தலைநகர் டெல்லியில் 14 வயதான பள்ளி மாணவன் ஒருவன் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியின் கஜூரி காஸ் நகரில் உள்ள ஜீவன் ஜோதி பள்ளிக்கூடத்தில் 14 வயதான மாணவர் ஒருவன் நேற்று பள்ளிக்கூட கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து இறந்த மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலிசாருக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்த அந்த மாணவன் உட்பட 5 மாணவர்கள் கழிவறையில் சண்டை போட்டுக்கொண்டது கழிவறையில் இருந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.