1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (14:49 IST)

பச்சிளம் குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்கள்

கேரள மாநிலத்தில் உள்ள திரூரில் ஒரு பச்சிய குழந்தையின் உடலை தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மா நிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மா.கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள திருர் என்ற பகுதியில் உள்ல  விவசாய நிலத்தில் ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ வீசிச் சென்றுள்ளனர்.

அங்கு வந்த தெரு நாய்கள் அந்தக் குழந்தையைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்திய போலீஸார், சடலத்தை  மீட்டு,  பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைடத்தனர்.

இந்தக் குழந்தயை யார் வீசியது என்பது  குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj