Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆந்திராவில் புத்தாண்டு அன்று கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்குத் தடை

puja
Last Updated: திங்கள், 25 டிசம்பர் 2017 (10:58 IST)
ஜனவரி 1-ஆம் தேதியான புத்தாண்டன்று கோவில்களில் கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது என ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அம்மாநில இந்து அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஜனவரி 1-ஆம் தேதியன்று வரும் ஆங்கிலப் புத்தாண்டை, கோவில்களில் கொண்டாடக் கூடாது, கோவில்களில் சிறப்பு பூஜைகள் போன்றவை நடைபெறக் கூடாது. ஏனென்றால் இது நம் வேத சாஸ்திரத்திற்கு எதிரானது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி அன்று மட்டுமே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அம்மாநில இந்து அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :