1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (08:09 IST)

முந்திக்கொண்டு வரும் தென்மேற்கு பருவமழை??

வழக்கமாக ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை இம்முறை முன்னதாகவே வரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
பருவமழை காலம் தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு... பொதுவாக ஜூன் மாதம் முதல் தேதி வாக்கில் துவங்கும் தென்மேற்கு பருவமழை இம்முறை முன்கூட்டியே மே 15 ஆம் தேதியே துவங்க வாய்ப்புள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் இதற்கு சாதகமான வானிலை காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் தமிழகம், புதுச்சேரியை பொறுத்த வரை வரும் 16 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, 14 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.