வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (21:44 IST)

ரயில் பயணிகள் படிப்பதற்காக மாதாந்திர இதழ்கள்: தெற்கு ரயில்வே அசத்தல்!

Train
ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் படிப்பதற்கு மாதாந்திர இதழ் வழங்கும் சேவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. 
 
தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் யுவர் பிளாட்பார்ம் என்னும் மாதாந்திர இதழ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது
 
சென்னை - மைசூர் சென்னை-கோவை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை-பெங்களூர் இடையே இயக்கப்படும் இரட்டை மாடி ரயில், சென்னை மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் ஆகிய ரயில்களில் இந்த மாதாந்திர இதழ் சேவை தொடங்கப்பட்டுள்ளது
 
இந்த இதழ்களை படித்து முடித்து விட்டு ரயிலிலேயே வைத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி குறித்து பயணிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.