வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: சனி, 3 அக்டோபர் 2015 (11:35 IST)

பீகாரில் சோனியாகாந்தி இன்று பிரச்சாரம்

பீகாரில் இன்று நடைபெறும் இரண்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள உள்ளார்.


 
 
243 தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல் அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.
 
இதில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள்,   ராஷ்டிரிய ஜனதா தள் காங்கிரஸ் ஆகிய காட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில்  ஐக்கிய ஜனதா தள் 101 தொகுதிகளிலும், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள் 101 இடங்களிலும், காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
 
பா.ஜ.க. அணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி 40 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 23 இடங்களிலும், ஹிந்துஸ்தானி அவாமி மோச்சா 20 இடங்களிலும், பா.ஜ.க. 160 இடங்களிலும் களமிறங்கி உள்ளன. பீகார் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே எஞ்சியிருப்பதால் கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
 
 இதனிடையே பீகாரின் பஹல்புர் மாவட்டத்தில் உள்ள ஹாகல்கான் மற்றும் வஜ்ரிகான்ஜி மாவட்டத்தின் காயா ஆகிய இரு பகுதிகளில் இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.