வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (15:12 IST)

உன் அம்மாவிடம் போய் கேள்: ரசிகரிடம் ஆவேசமடைந்த சோனாக்‌ஷி சின்கா

ரஜினியின் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சோனாக்‌ஷி சின்கா, இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் நேற்று டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.


 
 
சோனாக்‌ஷி சின்கா டுவிட்டரில் ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடுவது வழக்கம். ஆனால் நேற்று ரசிகர் ஒருவர் அவரிடம் கேட்ட கேள்வியால், சோனாக்‌ஷி சற்று ஆவேசமடைந்தார்.
 
ரசிகரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு ரசிகர் நீங்கள் எப்போது உங்கள் உடலை காட்டுவீர்கள்? மேலும் எப்போது ‘பிகினி’ உடை அணிவீர்கள் போன்ற அறுவருக்கத்தக்க கேள்விகளை கேட்டு சோனாக்‌ஷியை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டார்.
 
இதனால் ஆத்திரமடைந்த சோனாக்‌ஷி, நீங்கள் இந்த கேள்வியை உங்கள் அம்மாவிடம் கேளுங்கள், உங்கள் சகோதிரியிடம் கேளுங்கள். பின்னர் அவர்கள் சொல்லும் பதிலை என்னிடம் சொல்லுங்கள் என்றார்.
 
பின்னர் அந்த ரசிகர் தன் செயலுக்காக தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் தான் அந்த பதிவை நீக்கியதாக, சோனாக்‌ஷி சின்கா டுவிட்டரில் விளக்கமளித்தார்.
 
டுவிட்டரில் நாகரிகமற்ற முறையில் கேள்விகேட்ட ரசிகருக்கு சோனாக்‌ஷி அதிரடியாக பதிலடி கொடுத்ததையடுத்து, சோனாக்‌ஷிக்கு பலர் ஆதரவும், பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்.