ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2019 (16:20 IST)

இன்சூரன்ஸ் பணத்துக்காக பெற்றோரை கொலை செய்த கொடூர மகன்

ஆந்திர மாநிலம் ஓங்கோல் என்ற பகுதியை சேர்ந்தவர் நாராயண ரெட்டி. இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் இவர் மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் அவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார் 
 
இந்த நிலையில் தான் பணிபுரிந்த நிதி நிறுவனத்தில் இருந்து ஒரு சில லட்சங்களை நாராயண ரெட்டி முறைகேடு செய்து இருப்பதாக தெரிய வந்தது. இதனால் தனக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கவும், மது குடிக்க தேவையான பணத்தை தயார் செய்யவும் பெற்றோரையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். பெற்றோரின் பெயரில் ரூபாய் 15 லட்சம் இன்சூரன்ஸ் கட்டிவந்த நாராயண ரெட்டி பெற்றோர்களை கொலை செய்துவிட்டால் அந்த பணம் தனக்கு கிடைக்கும் என திட்டமிட்டுள்ளார்
 
அதன்படி கடந்த 21-ஆம் தேதி தாய் ஆதியம்மாள், தந்தை வெங்கட் ரெட்டி ஆகிய இருவருக்கும் தூக்க மாத்திரை கலந்த மோரை குடிக்க வைத்துள்ளார். மோர் குடித்தும் பெற்றோர்கள் உயிர் இழக்காததால் இருவரையும் கத்தியால் மணிக்கட்டு மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பின் மறுநாள் காலை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தங்கள் பெற்றோரை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த பணத்தை திருடிச் சென்று விட்டதாக நாடகமாடினார் 
 
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் ஒரு கட்டத்தில் நாராயண ரெட்டி மேலேயே சந்தேகம் அடைந்தனர். அவரை அழைத்து தங்கள் பாணியில் விசாரணை செய்தபோது இன்சூரன்ஸ் பணத்துக்காக பெற்றோரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நாராயண ரெட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் 
 
இன்சூரன்ஸ் பணத்துக்காக பெற்ற அம்மா அப்பாவை கொலை செய்த மகன் செய்த கொலையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது