வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (17:45 IST)

பென்ஷனுக்காக தாயின் மரணத்தை மறைத்த மகன் கைது!

கொல்கத்தாவில் பென்ஷன் வாங்குவதற்காக தனது தாயின் மரணத்தை  மூன்று வருடங்களாக மறைத்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
கொல்கத்தாவை சேர்ந்தவர் சுபாபிரதா மஜூம்தார். இவரது தாயார் பினா மஜீம்தார், மூன்று வருடங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் அரசு ஊழியர் என்பதால் அவருக்கு பென்ஷன் வந்து கொண்டிருந்தது. 
 
இதனால் அவரது மகன் தாயின் உடலை அடக்கம் செய்யாமல் பிரிட்ஜில்  மறைத்து வைத்து , பென்ஷன் பணத்தை இவ்வளவு நாட்களாக வாங்கி வந்துள்ளார்.  இவரின் மீது அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அதனால் அவர்கள் போலீஸில் புகார் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து, போலீசார் சுபாபிரதா வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது தாயின் உடலை அவர் பிரிட்ஜில்  மறைத்து வைத்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது.  இதனால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.