வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2016 (13:14 IST)

கைது செய்யப்படுவாரா சரிதா நாயர்? நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

கைது செய்யப்படுவாரா சரிதா நாயர்? நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை

சோலர் பேனல் விவகாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து காரணம் கூறி வந்ததை அடுத்து நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 
திரைப்பட நடிகை சரிதா நாயர், கோவையில் ஐசிஎம்எஸ் எனும் பெயரில் சூரிய மின்சக்தி உபகரணங்களை விற்பனை செய்து வந்தார். இவரிடம் கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜன் ரூ. 28 லட்சம், உதகையை சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட் ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ. 5.50 லட்சம் ரொக்கப் பணத்தினை சோலார் பேனல் அமைப்பதற்காக கொடுத்தனர்.
 
ஆனால், சரிதா நாயர் சோலார் பேனல் அமைக்கவோ, பணத்தை திருப்பித் தரவோ இல்லை. இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
 
இதையடுத்து சரிதா நாயர், கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர். இந்த மோசடி வழக்கு, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
இந்நிலையில், சோலார் பேனல் மோசடி தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன், வாக்குமூலம் அளித்தார். அப்போது, ’கடந்த வருடம் வாட்ஸ் ஆப்பில் என்னுடைய நிர்வாண காட்சிகளை பரப்பியது ஆலப்புழாவில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் தான்’ என குற்றம் சாட்டி இருந்தார்.
 
மேலும், கேரள முதல்வர் உம்மண் சாண்டி, அவரது மகன் சாண்டி உம்மண் மீதும் குற்றம் சாட்டியிருந்த சரிதா நாயர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான பென்னி பெகன்னான், தம்பானூர் ரவி மற்றும் உம்மன் சாண்டியின் முன்னாள் பாதுகாவலர் சலீம்ராஜ் ஆகியோர் சரிதா நாயருடன் பேசும் ஆடியோக்களை விசாரணை கமிஷனிடம் அளித்திருந்தார்.
 
ஆனால் பிப்ரவரி 18ஆம் தேதிக்குப் பிறகு நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். சரிதா நாயரின் வழக்கறிஞர், விசாரணை கமிஷன் முன் ஆஜராகி குறுக்கு விசாரணையில் கலந்துகொள்வதில் இருந்து இரண்டு நாட்கள் தள்ளி போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
ஆனால், நீதிபதி சிவராஜன், ’சரிதா நாயர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் காரணம் கூறிவருகிறார். ஆஜராகாவிட்டால் கைது செய்ய உத்தரவிட வேண்டிவரும்’ என இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.