திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (09:56 IST)

பொய்களை அள்ளி வீசுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் : ஸ்மிருதி இரானி

smiriti irani
குஜராத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் பொய்களை அள்ளி வீசுகிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்
 
பாஜக மகளிரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்மிரிதி இராணி, ‘ஆம் ஆத்மி பாஜக தொண்டர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது என்று கூறுவது பொய் என்றும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியிடம் வாரணாசி தொகுதியில் எப்படி போட்டியிட்டு தோல்வி அடைந்தாரோ, அதேபோல் குஜராத் சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைவார் என்று தெரிவித்துள்ளார்
 
குஜராத் மக்களுக்காக வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளார் என்றும் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றும் ஆனால் ஆம் ஆத்மி டெல்லியில் பேருந்து வாங்குவதில் கூட ஊழல் செய்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்