1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:01 IST)

கர்நாடகாவில் மீண்டும் குவாரி விபத்து : 6 பேர் மரணம்!

கர்நாடக மாநிலம் ஹிரங்காவல்லியில் உள்ள கற்குவாரியில் நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. 

 
கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கற்குவாரியில் நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். 
 
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோக விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர், கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் கல்குவாரிக்கு டைனமைட் என்ற வெடிபொருளை ஏற்றி சென்ற வாகனம் வெடித்து சிதறியதில் 15 - 20 கிமீ தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டு இந்த விபத்தால் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.