வழி விடுறியா.. சுட்டு தள்ளவா?? லாரி டிரைவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய சிவசேனாவினர்!? – மராட்டியத்தில் பரபரப்பு!
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் துப்பாக்கியை காட்டி லாரி டிரைவரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பை – புனே விரைவு சாலையில் சென்ற லாரி ஒன்றை பின்னால் வந்த வாகனம் கடக்க முயன்றுள்ளது. ஆனால் லாரி வழிவிடாத நிலையில் பின்னால் வந்த காரில் இருந்த நபர்கள் துப்பாக்கியை காட்டி லாரி டிரைவரை மிரட்டியுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த காரில் சிவசேனாவின் கட்சி அடையாளம் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்” என சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் தெரிவித்துள்ளார்.