1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

சிவசேனா கட்சி சின்னம் முடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

sivasena
சிவசேனாவின் கட்சி சின்னம் முடக்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவசேனாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஷிண்டே என்பவர் அந்த கட்சியில் இருந்து விலகி போட்டி சிவசேனா கட்சியை தொடங்கி ஆட்சியைப் பிடித்தார். அவருடைய ஆட்சிக்கு பாஜக ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் சின்னம் குறித்து இரு அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சிவசேனா கட்சியின் சின்னத்தை இரு அணிகளும் உரிமை கோரின
 
இது குறித்த மனு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது சிவசேனா கட்சியின் இரு அணிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக அந்த கட்சியின் தேர்தல் சின்னமான வில்-அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது
 
சிவசேனா கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Edited by Siva