வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 21 மே 2015 (22:26 IST)

”மோடியின் ஓராண்டு ஆட்சி நாட்டிற்கு ஒரு பேரழிவாகும்” - சீத்தாராம் யெச்சூரி

பிரதமர் நரேந்திர மோடியின் ஓராண்டு ஆட்சி நாட்டிற்கு ஒரு பேரழிவாகும் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
 
மும்பையில் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து பழங்குடி மக்களின் பேரணி நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு உறையாற்றினார்.
 
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி, “மோடியின் ஓராண்டு ஆட்சி என்பது நாட்டிற்கு ஒரு பெரும் பேரழிவாக அமைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நாம் ஒரு அபாயகரமான பேரழிவை ஏற்படுத்தும் போக்கை கண்டு வருகிறோம்.
 
புதிய தாராளமயப் பொருளாதார கொள்கைகள், நாடாளுமன்ற விதிமுறைகளை மீறுவது மற்றும் மதவாதசக்திகளின் வளர்ச்சி ஆகிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம். மோடி இதுவரை ஒரு ஆண்டுக்குள் 18 நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.
 
அவருடைய அரசானது இதுவரை இல்லாத அளவுக்கு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதில் சாதனை படைத்துள்ளது. பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளதாக பாஜக அரசு பெருமை அடித்துக் கொள்கிறது. உண்மையில், மொத்தத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலங்கள்தான் குறைந்துள்ளது.
 
குடும்ப வேலைகள் என்ற பெயரில் குழந்தை தொழிலாளர் முறையை அனுமதிக்கும்படி பாஜக அரசுதிருத்தம் கொண்டு வருகிறது; பிரச்சனையே என்னவென்றால், குடும்ப உழைப்பைத் தடை செய்வதுதான் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான ஒரே வழியாகும்” என்றார்.