1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 28 மே 2016 (10:27 IST)

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த கட்டணம் போதும்!

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவதற்கான குறைந்த கட்டண விமான சேவையை ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
 

 
தென்னிந்தியாவில் உள்ள சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விமான போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது.
 
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் சென்னை-சிங்கப்பூர், அமிர்தசரஸ்-சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்தைக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
 
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல ரூ.5500 என்ற குறைந்த கட்டணத்தில் இந்தச் சேவையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளதால் சிங்கப்பூர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னை தவிர, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் இந்தச் சேவையை நீடிப்பது குறித்து திட்டமிட்டுள்ளதாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை நிர்வாகி பாரத் மகாதேவன் கூறியுள்ளார்.
 
ஜெய்ப்பூர்-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் இதே போன்ற சேவை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். மற்ற நிறுவனங்களைப்போல் அல்லாமல் போயிங் டிரீம் லைன் விமானத்தை தங்கள் நிறுவனம் இயக்குவதால் ஒரே நேரத்தில் 300 பயணிகள் வசதியாக பயணிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.