1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (08:41 IST)

இந்தியாவில் இப்போது கொரோனா இல்லாத மாநிலம் சிக்கிம் மட்டும்தான்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 10,453 பேர் பாதிக்கப்பட்டு, 358 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 2,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கு அடுத்த இடத்தில் 1173 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவாமல் இருந்த நிலையில் இப்போது மேகாலயா மற்றும் நாகாலந்து ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மேகாலயா மாநில அரசு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.

தற்போதைய நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மட்டுமே கொரோனா பரவாத மாநிலமாக உள்ளது.