செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மே 2024 (19:34 IST)

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

சமீபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவு ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது கோவாக்சின் தடுப்பூசியிலும் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியிலும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தலாம் என பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
கடந்த ஓராண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சுவாச குழாய் தொற்று, நரம்பு மண்டல பாதிப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 
 
குறிப்பாக பதின்ம வயதை சேர்ந்தவர்களிடம் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா காலத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கிட்டத்தட்ட அனைவருக்கும் போடப்பட்ட நிலையில் இந்த இரண்டு தடுப்பூசிகளாலும் பக்க விளைவுகள் ஏற்படும் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran