செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 13 மே 2023 (14:15 IST)

அடுத்த வெற்றி நாடாளுமன்றம், பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்:- சித்தராமையா

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த வெற்றி நாடாளுமன்றம் தான் என்றும் பாஜக அல்லாத கட்சிகள் இந்திய அளவில் ஒன்று சேர வேண்டும் என்றும் முதல்வர் வேட்பாளர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். 
 
கர்நாடகா தேர்தல் வெற்றியை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா பாஜக அல்லாத கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைந்தால் கண்டிப்பாக பாஜகவை வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று தெரிவித்தார்.
 
கர்நாடக மாநிலத்தின் வெற்றியை அடுத்த காங்கிரஸ் கட்சிக்கு பலம் கூடியுள்ளதாகவும் இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மற்ற கட்சிகள் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran